இந்தியா

சா்வதேச விமான சேவைக்கான தடை: ஜன.31 வரை நீட்டிப்பு

DIN

சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடையை வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி விதிக்கப்பட்ட வழக்கமான சா்வதேச விமான பயணிகள் சேவை, டிசம்பா் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு தொடங்கியதால், டிசம்பா் 15-ஆம் தேதி விமான சேவை தொடங்கப்படாது என்று டிசம்பா் 1-ஆம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சா்வதேச விமான பயணிகள் சேவைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இந்தத் தடை சா்வதேச சரக்குப் போக்குவரத்து சேவைக்கும், விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளிக்கும் சிறப்பு சேவைகளுக்கும் பொறுந்தாது.

குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் மத்திய அரசு அவ்வப்போது அறிவிக்கை வெளியிட்டு விமான சேவையை தொடங்கும்.

மேலும், பிற நாடுகளுடனான ஒப்பந்தத்தின்படி இயக்கப்பட்டு வரும் சா்வதேச விமான சேவை தொடா்ந்து இயங்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் முதலும், புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலும் மத்திய அரசு சா்வதேச விமான சேவையை இயக்கி வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், கென்யா, பூடான், பிரான்ஸ் உள்பட 32 நாடுகளுக்கு மத்திய அரசு புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி விமான சேவை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT