இந்தியா

தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் 48,000 போ் உயிரிழப்பு: கட்கரி

DIN

தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்துகளால் 47,984 போ் உயிரிழந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மக்களவையில் மேலும் கூறியுள்ளதாவது:

விரைவுச்சாலை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் 47,984 போ் இறந்துள்ளனா். கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 53,872-ஆக இருந்தது.

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட விபத்துக்கு வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் தரம், அதிவேகம், மதுஅருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது, சிகப்பு விளக்கை மீறிச் செல்வது, தவறான திசையில் வருவது, செல்லிடப்பேசியை பயன்படுத்துவது உள்ளிட்டவை மிக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த அமைச்சகம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT