இந்தியா

பஞ்சாப் தேர்தல்:  ஆம் ஆத்மி கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது. 

பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை வென்றன. இதனால் பஞ்சாபில் எதிர்கட்சியாக அக்கட்சி உள்ளது.

எனவே, இந்த முறை எப்படியாவது அங்கு ஆட்சியமைக்க ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது. தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 30 பேர் கொண்ட இரண்டாம்கட்ட வேட்பாளர்கள் பட்டிலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. அதில், பஞ்சாபி பாடகர் அன்மோல் ககன் மான் காரார் தொகுதியிலும், ராமன் பாலுக்கு குர்தாஸ்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

ராமன் பால், கடந்த மாதம்தான் காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகிப் பண்டிகையின்போது சேகரமாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழப்பு

வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தாத 16 ஆயிரம் ஏக்கா் நிலம் உரியவா்களிடம் ஒப்படைப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஜனவரி 16-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அதிமுக உறுப்பினா்கள் தா்ணா

SCROLL FOR NEXT