இந்தியா

தில்லியில் தொடர்ந்து ‘மோசம்’ பிரிவில் காற்று மாசு

DIN

தில்லியில் இன்று காற்றின் தரம் ‘மோசம்’ என்ற பிரிவில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள், விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தில்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காற்று மாசு ஏற்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் தில்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் சிரமம் நிலவி வருகின்றது.

தொடர்ந்து 2 நாள்களாக ‘மோசம்’ என்ற பிரிவில் இருந்த நிலையில் இன்றும் ‘மோசம்’(293) என்ற பிரிவுக்கு வந்துள்ளது.

காற்று மாசு காரணமாக தில்லியில் தொடர்ந்து பள்ளிகள், தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT