இந்தியா

பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் கூடுதல் தளர்வு

DIN

சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுககளை தேவசம் போர்டு அறிவித்தது.

இரண்டு மாத கால மண்டல-மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. பலத்த மழை, கரோனா பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் இணைய வழி முன்பதிவு வரிசையின் அடிப்படையில் பக்தா்கள் சபரிமலை புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

அதனைத் தொடா்ந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில் சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் தளர்வுககளை தேவசம் போர்டு அறிவித்தது.

இதன்படி பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் பகுதியிலுள்ள வனப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் பம்பை ஆற்றில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் அதில் தேவசம் போர்டு குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT