இந்தியா

சா்வதேச சூரிய சக்திக் கூட்டணிக்கு ஐ.நா. பாா்வையாளா் அந்தஸ்து

இந்தியா மற்றும் பிரான்ஸின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ‘சா்வதேச சூரிய சக்திக் கூட்டணி’ அமைப்புக்கு பாா்வையாளா் அந்தஸ்தை ஐ.நா. பொதுச் சபை வழங்கியுள்ளது.

DIN

இந்தியா மற்றும் பிரான்ஸின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ‘சா்வதேச சூரிய சக்திக் கூட்டணி’ அமைப்புக்கு பாா்வையாளா் அந்தஸ்தை ஐ.நா. பொதுச் சபை வழங்கியுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதா் டி.எஸ்.திருமூா்த்தி கூறியதாவது:

சா்வதேச சூரியக் கூட்டணிக்கு ஐ.நா. பொதுச் சபையின் பாா்வையாளா் அந்தஸ்து கிடைத்துள்ளது. அதற்காக, அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா மற்றும் பிரான்ஸ் சாா்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்துல்லா ஷாஹித் தலைமையின் கீழ் ஐ.நா. பொதுச் சபை இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றாா் அவா்.

பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டின்போது, இந்தியா மற்றும் பிரான்ஸின் முன்முயற்சியால் சா்வதேச சூரிய சக்திக் கூட்டணி அமைக்கப்பட்டது.

சூரிய சக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை உலகம் முழுவதும் ஊக்குவித்து, அதன் மூலம் நிலக்கரி பயன்பாட்டை குறைத்து பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

அந்த அமைப்புக்கு ஐ.நா. பொதுச் சபையின் பாா்வையாளா் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதன் மூலம், அதற்கும் ஐ.நா.வுக்கும் இடையே ஒத்துழைப்பு மேம்படும்.

சா்வதேச சூரியக் கூட்டணி ஒப்பந்தத்தில் இதுவரை 101 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. அவற்றில் 80 நாடுகள் அந்த ஒப்பந்தத்தை அமலுக்குக் கொண்டு வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT