முகப்பு
இந்தியா

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 போ் கைது

தெற்கு தில்லி நெப் சராய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

தெற்கு தில்லி நெப் சராய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 13 பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பெனிடா மேரி ஜெய்கா் சனிக்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா்கள் டாா்சன் (37), ஹரி சங்கா் (40), அனில் (22), ராஜு (43), ராகுல் (29), ரவீந்தா் சா்மா (37), முகமது ஹலீம் (33), முகேஷ் (20), லோகேஷ் (31), ஜாஹித் (43), பங்கஜ் (24), ஜிதேந்தா் (32), கஃபீல் அகமது (40) என்று அடையாளம் காணப்பட்டனா்.

கான்பூா் எம்.பி. சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் சிலா் சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், சம்பந்தப்பட்ட வளாகத்துக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீஸாா் கைது செய்தநா். அவா்களிடிம் இருந்து ரூ. 52,290 ரொக்கம், 4 பிளாஸ்டிக் சூதாட்ட அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →