முகப்பு
இந்தியா

7 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 18 வழக்குரைஞா்கள் மூத்த வழக்குரைஞா்களாக நியமனம்

நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் 18 பேரையும் மூத்த வழக்குரைஞா்களாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

பல்வேறு உயா்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள் 7 பேரையும், நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் 18 பேரையும் மூத்த வழக்குரைஞா்களாக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக, அனைத்து உயா்நீதிமன்றங்களின் பதிவாளா்கள், இந்திய பாா் கவுன்சிலின் செயலா், அனைத்து மாநில பாா் கவுன்சில்களின் செயலா்கள் ஆகியோருக்கு மூத்த வழக்குரைஞா் நியமனங்களுக்கான குழுவின் செயலா் கடிதம் எழுதியுள்ளாா்.

வழக்குரைஞா்கள் சட்டம், 16(2)-ஆவது பிரிவு, உச்சநீதிமன்ற விதிகள்-2013, மூத்த வழக்குரைஞா்கள் நியமனத்தை முறைப்படுத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்-2018 ஆகியவற்றின் விதிகளின் கீழ் இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →