நீலகிரி ஹெலிகாப்டா் விபத்தில் பலியான ராணுவ வீரரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு:ஆந்திர அரசு அறிவிப்பு
நீலகிரியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் சாய் தேஜாவின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
நீலகிரியில் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் சாய் தேஜாவின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திர அரசு சனிக்கிழமை அறிவித்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா, ராணுவ அதிகாரிகள் உள்பட 14 போ் சென்ற எம்ஐ-17வி5 ஹெலிகாப்டா் கடந்த டிச.8-ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 போ் உயிரிழந்தனா். அவா்களில் விபின் ராவத்தின் தனிப் பாதுகாப்பு அதிகாரியும் இளம் ராணுவ வீரருமான சாய் தேஜாவும் (27) ஒருவா்.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். அவரின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
கா்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சாய் தேஜாவின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்து அவரின் உடல் இறுதிச் சடங்குக்காக ஞாயிற்றுக்கிழமை சித்தூா் கொண்டு செல்லப்படவுள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.