திறமையான நடிப்பின் மூலம் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்: ரஜினிக்கு மோடி வாழ்த்து
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்தியாதிறமையான நடிப்பின் மூலம் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்: ரஜினிக்கு மோடி வாழ்த்து
சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனறர்.
இதனிடையே, அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தனது திறமையான நடிப்பு, படைப்பாற்றல் மூலம் அவர் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தட்டும். அவருக்கு நீண்ட வாழ்நாளையும் நல்ல உடல்நிலையையும் கடவுள் அளிக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு