முகப்பு
இந்தியா

‘சிபிஎஸ்இ கேள்விக்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’: சோனியா காந்தி

சிபிஎஸ்சி 10ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
மக்களவையில் சோனியா காந்தி
பகிர்:

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை(டிச.11) ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது.

இதில், ஒரு கேள்வியில் கணவனின் பேச்சை கேட்டால்தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மக்களவையில் இன்று சோனியா காந்தி பேசியதாவது:

சிபிஎஸ்இ தேர்வில் இதுபோன்ற கேள்விகள் எப்படி இடம்பெற்றது என்பது குறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேலும், அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →