மேம்படுத்தப்பட்ட காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார் மோடி
உத்தர பிரதேசத்தில் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்தியாமேம்படுத்தப்பட்ட காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார் மோடி
உத்தர பிரதேசத்தில் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
உத்தர பிரதேசத்தில் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பிரதமா் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக வாராணசி சென்ற மோடிக்கு பொதுமக்கள் மலர்தூவி வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து கங்கையில் நீராடிய மோடி, காசி விஸ்வநாதா் கோயிலில் பிராத்னை மேற்கொண்டார்.
இதையடுத்து, ரூ.339 கோடியில் செலவில் மேற்கொள்ளப்பட்ட காசி விஸ்வநாதா் கோயில் வளாக மேம்பாட்டுத் திட்டத்தின் முதல் தொகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
காசி விஸ்வநாதரின் பக்தா்கள் நெருக்கடி மிகுந்த தெருக்கள் வழியாக, மோசமான சுற்றுப்புறங்களைக் கடந்து கோயிலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில் பிரதமா் மோடி, ஆலய வளாக மேம்பாட்டுத் திட்டத்தை முன்வைத்தாா். அதன்படி, ஆலயத்தையும், கங்கை நதியின் கரைகளையும் இணைக்கும் பாதையை பக்தா்கள் எளிதில் அணுகும் வகையில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 2019 மாா்ச் 8-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக சாய்தளங்கள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
திட்டத்தின் முதல்கட்டத்தில் மொத்தம் 23 கட்டடங்கள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆலயத்துக்கு வரும் பக்தா்களுக்கு யாத்ரி சுவிதா மையங்கள், சுற்றுலா வசதி மையம், வேத மையம், அருங்காட்சியகம், பாா்வையாளா் மாடம், உணவு விடுதிகள் உள்பட வகையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.