இந்தியா

நாடாளுமன்ற தாக்குதல் நாள்: எம்.பி.க்கள் அஞ்சலி

DIN

நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் திங்கள்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

தாக்குதல் நடைபெற்று இன்று 20ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கைய நாயுடு தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT