ராகுல் காந்தி (கோப்புப் படம்) 
இந்தியா

லக்கிம்பூர் வன்முறை: ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல்

லக்கிம்பூர் வன்முறையின் விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார்.

DIN

லக்கிம்பூர் வன்முறையின் விசாரணை குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றியதும், வன்முறையில் ஈடுபட்டதும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி எனவும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு நேற்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்தது.

இந்நிலையில், இன்றைய மக்களவை கூட்டத்தில் லக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மானத்தை மக்களவை செயலாளரிடம் அளித்துள்ளார்.

இந்த நோட்டீஸில், அவையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைக்க வேண்டும். லக்கிம்பூர் விவகாரம் குறித்து விசாரணைக் குழுவின் அறிக்கையை விவாதிக்க வேண்டும். தொடர்ந்து விசாரணை நேர்மையாக நடைபெற மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈராச்சி ஊராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

தினமணி செய்தி எதிரொலி: கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு முதல்வா் ஆறுதல்

காா்த்திகை மாதப் பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிா்ப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT