இந்தியா

வாகன சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் டிச.31 வரை நீட்டிப்பு

பொதுப்போக்குவரத்து வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர். 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

DIN


பொதுப்போக்குவரத்து வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர். 31 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கரோனா தொற்று காரணமாக வாகன பதிவு உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, வாகனங்களின் தகுதிச் சான்றிதழ், புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 

இதையடுத்து தொற்று பரவலை கருத்தில்கொண்டு மீண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை செல்லுபடி காலத்தை நீட்டித்து மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டது. 

இதையடுத்து மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மோட்டார் வாகன விதிகள் 1989இன் கீழ் அனைத்து ஆவணங்களும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், மூன்றாவது முறையாக பொதுப்போக்குவரத்து வாகனங்களின் தகுதிச் சான்றிதழ், வாகன புதுப்பிப்பு, அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர். 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுவே கடைசி நீட்டிப்பு என்ற நிபந்தனையுடன் அரசாணை வெளியிட்டுள்ளது மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

SCROLL FOR NEXT