கோப்புப்படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் 2 பெண் நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படை போலீசார் நடத்தியாய் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண் நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறப்பு படை போலீசார் நடத்தியாய் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண் நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையுடன் மாநில சிறப்புப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள காண்டரஸ் வனப்பகுதியில் நக்ஸலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்றனர். 

அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸலைட்டுகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இரண்டு பெண் நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நக்ஸலைட்டுகளைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

SCROLL FOR NEXT