தில்லி கரோனா: தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் அதிகரிப்பு
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 18-க்கு பிறகு இதுவே அதிகபட்ச பதிவு.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் 18-க்கு பிறகு இதுவே அதிகபட்ச பதிவு.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 91 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,193 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.20 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
மேலும் 100 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,42,288 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,16,656 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25,101.
இன்றைய நிலவரப்படி 531 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஜூன் 18-ம் தேதி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.21 சதவிகிதமாகப் பதிவானது.