நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!
நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா மார்ச் 27-ல் பதவியேற்பது குறித்து...
நேபாள நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில், முன்னாள் பிரதமர் சர்மா ஓலிக்கு எதிராக, கடந்த 2025 ஆம் ஆண்டு இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) வரலாற்று வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் ஆா்எஸ்பி கட்சியின் 125 உறுப்பினர்கள் நேரடியாக வெற்றி பெற்றனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் 57 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 182 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆர்எஸ்பி கட்சி ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில், நேபாள நாடாளுமன்றத்தில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 275 உறுப்பினர்களும் வியாழக்கிழமை (மார்ச் 26) பதவியேற்றுள்ளனர்.
இத்துடன், ஆர்எஸ்பி கட்சியின் தலைவரான 35 வயதாகும் முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா நாளை நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு நேபாள அதிபர் ராம் சந்திர பௌடெல் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.
நேபாள தேர்தலில் முன்னாள் பிரதமர் சர்மா ஓலியை எதிர்த்து ஜாபா-5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Former rapper Balendra Shah will be sworn in as the new Prime Minister of Nepal on Friday (March 27), it has been reported.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.