நாட்டில் புதிதாக 11 பேருக்கு ஒமைக்ரான்; மொத்த எண்ணிக்கை 156 ஆக உயர்வு!
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்பு தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக ஒமைக்ரான் பாதிப்பு கா்நாடக மாநிலத்தில் இருவருக்கு டிச. 2-ஆம் தேதி கண்டறியப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 145-ஆக இருந்தது.
இதையடுத்து இன்று இந்தியாவில் புதிதாக 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட மொத்த பாதிப்பு 156 ஆக உயர்ந்துள்ளது. தில்லி, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இன்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் எண்ணிக்கை
மகாராஷ்டிரம் 48
தில்லி 24
தெலங்கானா 20
ராஜஸ்தான் 17
கா்நாடகம் 19
கேரளம் 15
குஜராத் 9
ஆந்திரம் 1
சண்டீகா் 1
தமிழ்நாடு 1
மேற்கு வங்கம் 1.