கோப்புப் படம் 
இந்தியா

சென்னை உள்பட ஏழு புல்லட் வழித்தடங்களுக்கு திட்டமிடும் ரயில்வே

நாடு முழுவதும் சுமார் 7 புல்லட் வழித்தடங்களை உருவாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ENS


புது தில்லி: ஏற்கனவே திட்டமிடப்பட்ட மும்பை - அகமதாபாத் இடையேயான அதிகவிரைவு புல்லட் விரைவு ரயில் திட்டம் இன்னும் நிறைவடையாத நிலையில், நாடு முழுவதும் சுமார் 7 புல்லட் வழித்தடங்களை உருவாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாராணசிக்கும் இதில் இடம் உண்டு. அதன்படி, புது தில்லி - வாராணசிக்கு இடையே ஒரு புல்லட் ரயில் திட்டம் வரவிருக்கிறது.

எப்படி, சீனா, தனது முக்கிய நகரங்கள் பலவற்றையும் புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் இணைத்துள்ளதோ, அதுபோல, நம் நாட்டிலும், மிகப்பெரிய நகரங்களை புல்லட் ரயில்களைக் கொண்டு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

மும்பை - அகமதாபாத் இடையே தற்போது நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டதும் மும்பையிலிருந்து, மிகப்பெரிய தொழில் நகரமான நாக்பூருக்கு செல்வது மிகவும் எளிதாகும். ஏற்கனவே இது தொடர்பான நீண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வறிக்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிதாக அமையவிருக்கும் புல்லட் ரயில் வழித்தடங்களின் விவரம்
1. தில்லி - வாராணசி (அயோத்தியா உள்பட) 
2. மும்பை - நாக்பூர் (740 கி.மீ.)
3. தில்லி - அகமதாபாத் (886 கி.மீ.)
4. தில்லி - அமிருதசரஸ் (459 கி.மீ.)
5. மும்பை - ஹைதராபாத் (711 கி.மீ.)
6. சென்னை - மைசூரு (435  கி.மீ.)
7. வாராணசி - ஹௌரா (760 கி.மீ.)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT