முகப்பு
இந்தியா

தில்லி கரோனா: கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்புகள்

தில்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்குப் புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்குப் புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 125 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து மூன்றாவது நாளாக 0.20 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் 58 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,42,515 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 14,16,789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலி எண்ணிக்கை 25,102 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி 624 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் இதுவே அதிகம்.

முன்னதாக, கடந்த ஜூலை 16-ம் தேதி 657 பேர் நோய்த் தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வந்தனர். ஜூன் 22-ம் தேதி 134 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.