கர்நாடகத்தில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று 
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் தொற்று

கர்நாடகத்தில் இன்று மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

DIN

கர்நாடகத்தில் இன்று மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி ஒமைக்ரான் வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒமைக்ரான் பாதிப்பு பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் இதுவரை 236 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடகத்தில் இன்று மேலும் 12 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் 5 பேர் பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் என்றும், நைஜீரியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து மற்றும் கானா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கர்நாடக்த்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT