கோப்புப்படம் 
இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தல்: பஞ்சாப் எம்பிக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் சோனியாகாந்தி

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அம்மாநில மக்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

DIN

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அம்மாநில மக்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை மாலை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளும் பஞ்சாப் தேர்தலில் களமிறங்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

SCROLL FOR NEXT