முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் அதிகரிக்கும் ஒமைக்ரான்: இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் ஆலோசனை

​மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி, முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வருவதையொட்டி, முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் ஆலோசனை நடத்துகிறார்.

மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புதிதாக 23 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் தொற்றால் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

இதையொட்டி, முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று இரவு 10 மணிக்கு காணொலி மூலம் கரோனா தடுப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 34 பேர் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியும் ஒமைக்ரான் அதிகரிப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →