இந்தியா

ஒமைக்ரான்: ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் பேசியது என்ன?

DIN


சுகாதாரக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) மாலை ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியது: 

"ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தலால் நாம் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். மாவட்டத்தில் தொடங்கி மாநிலங்கள் வரை சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

அதிகரிக்கும் சூழலைக் கவனத்தில் கொண்டு அரசு எச்சரிக்கையுடன் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மாநிலங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து உதவுகிறது.

பரிசோதனைகளை அதிகரிப்பது, தடுப்பூசி செலுத்தப்படுவதை துரிதப்படுத்துவது மற்றும் சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்."

தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாநிலங்கள், பாதிப்புகள் அதிகரித்தும் வரும் மாநிலங்கள் மற்றும் போதிய சுகாதார உள்கட்டமைப்பு இல்லாத மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு குழுக்களை அனுப்பவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT