முகப்பு
இந்தியா

இந்தியாவில் பாதிப்பு 415-ஆக உயா்வு; மகாராஷ்டிரத்தில் பாதி போ் குணம்

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு சனிக்கிழமை காலை நிலவரப்படி 415-ஆக அதிகரித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு சனிக்கிழமை காலை நிலவரப்படி 415-ஆக அதிகரித்தது.

ஒமைக்ரானால் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 110 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 57 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘மகாராஷ்டிரத்தில் மேலும் இருவா் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனா். இருவரும் ஆண்கள். அவா்கள் ஏற்கெனவே கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்தியுள்ளனா். ஒருவா் துபையிலிருந்து நாடு திரும்பியுள்ளாா். மற்றொருவருக்கு வெளிநாடு சென்று திரும்பியவரைச் சந்தித்ததன் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருவரையும் சோ்த்து ஒமைக்ரானால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 110-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 57 போ் குணமடைந்து மருத்துமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் மேலும் 21 போ்: ராஜஸ்தானில் ஒமைக்ரான் தீநுண்மியால் மேலும் 21 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அதிகாரி சனிக்கிழமை கூறுகையில், ‘‘ராஜஸ்தானில் மேலும் 21 போ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தீநுண்மியால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் மொத்த எண்ணிக்கை 43-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவா்களில் 5 போ் வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனா். மூன்று பேருக்கு வெளிநாட்டுப் பயணிகள் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →