முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான்

ராஜஸ்தானில் இன்று மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

ராஜஸ்தானில் இன்று மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஜெயப்பூர் 11, அஜ்மீர் 6, உதய்பூர் 3 மற்றும் வெளிமாநிலத்தவர் ஒருவர் என மொத்தம் 21 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்மூலம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனாவால் இதுவரை 415 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரம் 108, தில்லி 79, குஜராத் 43, தெலங்கானா 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →