முகப்பு
இந்தியா

சோயாவை இருப்பு வைக்க கட்டுப்பாடு: மத்திய அரசு

பதுக்கலைத் தடுத்து விலையை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக சோயாவை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

பதுக்கலைத் தடுத்து விலையை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக சோயாவை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கால்நடைத் தீவனத்தில் முக்கிய மூலப் பொருளாக உள்ள சோயாவின் விலை வெளிச் சந்தையில் அதிகரித்து வருகிறது. விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அதனை இருப்பு வைக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சோயாவை பயன்படுத்தும் ஆலைகள் அதனை அதிகபட்சம் 90 நாள்கள் வரையிலான உற்பத்திக்கு மட்டுமே இருப்பு வைக்க வேண்டும் என்பதுடன் சேமித்து வைக்கும் இடத்தையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அரசிடம் பதிவுபெற்ற வா்த்தக நிறுவனங்கள் அதிகபட்டமாக 160 டன் வரை கையிருப்பு வைத்துக் கொள்ளாலம் என்பதுடன் சேமித்து வைக்கும் இடம் குறித்தும் அறிவிக்க வேண்டும்.

டிசம்பா் 23-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த கட்டுப்பாடு வரும் 2022-ஆம் ஆண்டு ஜூன் 30 வரையில் அமலில் இருக்கும். அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் சோயா கொண்டு வரப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →