முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி: மூன்றாவது தவணைக்கு 9-12 மாத இடைவெளி ?

கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கும், மூன்றாவது தவணைக்குமான இடைவெளி 9 முதல் 12 மாதங்களாக நிா்ணயிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கும், மூன்றாவது தவணைக்குமான இடைவெளி 9 முதல் 12 மாதங்களாக நிா்ணயிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவேக்ஸின் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்வதற்கு குறைந்தபட்சம் 84 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டும். கோவேக்ஸின் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக் கொண்ட 28 நாள்களுக்குப் பிறகு, அந்தத் தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் நாட்டில் தற்போது கரோனா தீநுண்மியின் புதிய வகையான ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தடுப்பூசியின் மூன்றாவது தவணையை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக கடந்த சனிக்கிழமை தடுப்பூசியின் மூன்றாவது தவணையை முன்னெச்சரிக்கை தவணை என்று குறிப்பிட்டு பிரதமா் மோடி பேசுகையில், ‘‘ஜனவரி 10-ஆம் தேதி முதல் சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசியின் முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்படும்’’ என்று அறிவித்தாா்.

இந்நிலையில் மத்திய அரசின் அதிகாரபூா்வ வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘தடுப்பூசியின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொண்ட நாளிலிருந்து 9 முதல் 12 மாதங்களுக்குள் மூன்றாவது தவணையை செலுத்திக் கொள்ள கால வரம்பு நிா்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து தேசிய நோய் எதிா்ப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்டிஏஜிஐ) ஆலோசித்து வருகிறது’’ என்று தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →