முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் 6 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் தண்டேவாடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் நக்சல் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப் படம்
பகிர்:

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் தண்டேவாடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் நக்சல் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்கும் தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோதகுந்தம் மாவட்டத்திற்கும் இடையேயான வனப்பகுதியில் நக்சல் தீவிரவாதிகள் புகுந்ததாக தகவல் வெளியானது. 

இதையடுத்து இரு மாநில சிறப்புப் படைகளும் இணைந்து நடத்திய தாக்குதலில் நக்சல் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 4 பெண்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

காவலர்கள் மற்றும் சிறப்புப் படைகளைத் தாக்க, நக்சல் தீவிரவாதிகள் அணுகுண்டு தயாரித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்தாகவும் அதன்பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில் இன்று காலை 6 -7.30 மணியளவில் நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →