இந்தியா

பஞ்சாபில் பாஜகவிற்கு சாதகம்?: கட்சித் தாவிய 2 காங். எம்எல்ஏக்கள்

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். 

DIN

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஃபேட் சிங் பாஜ்வா, பல்விந்தர் சிங் லத்தி ஆகியோர் இன்று பாஜகவில் இணைந்தனர். 

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் மும்முரமாக களப்பணியாற்றி வருகின்றன. பிரசாரங்களை மேற்கொள்ளும் வகையில் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மக்களிடம் தங்களது திட்டங்களை அறிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஃபேட் சிங் பாஜ்வா, பல்விந்தர் சிங் லத்தி பாஜகவில் சேர்ந்துள்ளனர். 

மேலும், ஐக்கிய அகாலி தளம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராஜ் தேவ் சிங் கால்சா, பஞ்சாப் - ஹரியாணா உயநீதிமன்ற நீதிபதியான மதுமீத் ஆகியோரும் பாஜகவில் இணைந்துள்ளனர். 

பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்று (டிச.28) மொத்தம் எட்டு உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT