முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு: சபரிமலை செல்வோருக்கு விலக்கு

கேரளத்தில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ள நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:48 AM
சபரிமலை செல்வோருக்கு விலக்கு
பகிர்:

கேரளத்தில் இன்றுமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தவுள்ள நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை பரவி வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ள கேரள அரசு, இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிடையே மகரஜோதி பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படவுள்ள நிலையில், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →