முகப்பு
இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதல்களில் 3 பயங்கரவாதிகள் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Updated On : 31 டிசம்பர், 2021 at 10:09 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதல்களில் 3 பயங்கரவாதிகள் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டனா்.

ஸ்ரீநகர் மாவட்டத்தில் பந்தா செளக் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் ராணுவத்தினா் மற்றும் காவல் துறையினா் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Advertisement

இந்த மோதலில் ஒரு மத்திய பாதுகாப்புப் படை வீரரும், 3 காவலர்களும் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஜம்மு - காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக புதன்கிழமை இரவு ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 தீவிரவாதிகளும் ஒரு காவலரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.