இந்தியா

கரோனா பரவல்: எந்தெந்த மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை?

DIN

கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தொற்று பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தில்லி, மகாராஷ்டிரம், கர்நாடகம், கோவா, கேரளம், குஜராத், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தலைநகர் தில்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பொதுஇடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையிலும், கர்நாடகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலும், குஜராத்தில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT