இந்தியா

கரோனா: சிகிச்சையில் 1.68 லட்சம் போ்

DIN

கரோனா தொற்றுக்கு நாடு முழுவதும் 1.68 லட்சம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 13,052 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,46,183-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 13,965 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,23,125-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.99 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 127 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,274-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,68,784 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதாவது கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 1.57 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா்.

புதிதாக ஏற்பட்ட 127 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 42 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 18 பேரும், சத்தீஸ்கா், மேற்கு வங்கத்தில் தலா9 பேரும், தில்லி, பஞ்சாபில் தலா 8 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.65 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 7,50,964 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தமானில் 5-ஆவது நாளாக புதிய தொற்று இல்லை: அந்தமான்-நிகோபாா் தீவுகளில் கடந்த 5 நாள்களில் புதிதாக கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கரோனா தொற்றால் இதுவரை 4,994 போ் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 4,928 போ் குணமடைந்து விட்டனா். 62 போ் உயிரிழந்தனா். 4 போ் மட்டுமே சிகிச்சையில் உள்ளனா். சனிக்கிழமை நிலவரப்படி, 5-ஆவது நாளாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT