மகாராஷ்டிரம்: 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி வழங்கப்பட்ட கொடூரம் 
இந்தியா

12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி வழங்கப்பட்ட கொடூரம்

12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கைகளை சுத்தப்படுத்த பயன்படும் கிருமிநாசினி வழங்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ENS


யவத்மால்: மருத்துவத்துறையின் கவனக் குறைவு காரணமாக, மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கைகளை சுத்தப்படுத்த பயன்படும் கிருமிநாசினி வழங்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

5 வயதுக்கு உள்பட்ட 12 குழந்தைகளும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, ஆஷா - சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, பன்போரா ஆரம்ப சுகாதார நிலையத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முன்பு, கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கிருமிநாசினி திரவத்தை, தவறுதலாக, 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக அளித்துள்ளனர்.

இது குறித்து யவத்மால் மாவட்ட அதிகாரி பஞ்சால் கூறுகையில், சொட்டு மருந்து வழங்க 15 நாள்களுக்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர்கள் பின்பற்றாமல், தங்களது கைகளை சுத்தப்படுத்த கொடுத்த திரவத்தை குழந்தைகளுக்கு அளித்துள்ளனர்.  இதுபோன்ற கவனக்குறைவான செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT