முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாளை (பிப்.3) மாலை வரை ஒத்திவைப்பு

புது தில்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக மக்களவை நாளை மாலை வரை  (பிப்.3) ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாளை (பிப்.3) வரை ஒத்திவைப்பு
பகிர்:

புது தில்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக மக்களவை நாளை மாலை வரை  (பிப்.3) ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டநிலையில் மக்ககளவை இன்று காலை கூடியதும், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, மக்களவை மீண்டும் மாலை 5 மணிக்கு கூடியது. மக்களவை கூடியதும் அமளியில் ஈடுபடத் தொடங்கியதால் இரவு 7 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.  

அதனைத் தொடர்ந்து மக்களவை கூடியதும் வேளாண்சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்களவை நாளை மாலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →