7 பேர் விடுதலை வழக்கு: பிப். 9-ல் உச்சநீதிமன்றம் விசாரணை
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு பிப்ரவரி 9-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு பிப்ரவரி 9-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் 3 நாள்களுக்குள் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அவர் எந்த முடிவும் எடுக்காததால், உச்சநீதிமன்றத்திற்கு மீண்டும் வழக்கு சென்றுள்ளது.
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்ய அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.
அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து விடுதலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக 3 அல்லது 4 நாள்களுக்குள் ஆளுநர் தமது முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனிடையே இது தொடர்பாக ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காததால், வரும் வெள்ளிக் கிழமையுடன் வழக்கு ஒத்திவைப்பு கால அவகாசம் முடிவடையவுள்ளதால் பிப்ரவர 9-ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.