கிரேட்டா துன்பெர்க் 
இந்தியா

‘விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தொடரும்’: பின்வாங்காத கிரேட்டா துன்பெர்க்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சூழலியல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சூழலியல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு, பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம் என்ற அவரது பதிவு பெரும்கவனத்தைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து கிரேட்டா துன்பெர்க் மீது குற்றவியல் சதி மற்றும் பகைமையை ஊக்குவித்ததாக குற்றம்சாட்டி தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. 

இந்நிலையில் வியாழக்கிழமை தனது சுட்டுரைப் பதிவில் கருத்து பதிவிட்டுள்ள அவர்,  “இப்போதும் நான் விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். எந்தவிதமான வெறுப்பு, மனித உரிமைக்கு எதிரான அச்சுறுத்தல் அல்லது வன்முறையால் இதனை மாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT