‘விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு இல்லை’: மத்திய அரசு
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு உலக நாடுகள் ஆதரவளிக்கவில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
இந்தியா‘விவசாயிகளின் போராட்டத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு இல்லை’: மத்திய அரசு
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு உலக நாடுகள் ஆதரவளிக்கவில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்திற்கு உலக நாடுகள் ஆதரவளிக்கவில்லை என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 70 நாள்களுக்கும் மேலாக தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு மற்ற நாடுகள் ஆதரவளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள உள்நோக்கம் கொண்ட இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் உள்நாட்டு விவகாரங்களில் கனடா தலையிடுவது கண்டனத்திற்குரியதாக குறிப்பிடப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.