முகப்பு
இந்தியா

பிகாரில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியீடு

பிகாரில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பிகாரில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியீடு
பகிர்:

பிகாரில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக பிகாரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தள்ளிப்போனது.

இந்நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் மாநிலத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்  என வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது.

முன்னதாக கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →