தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கரோனா
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 477 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 477 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கர்நாடகத்திலிருந்து வந்தவர்கள் 4 பேர், கேரளம் மற்றும் தெலங்கானாவிலிருந்து வந்தவர்கள் தலா ஒருவர்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,41,326 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
மேலும் 503 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,24,527 பேர் குணமடைந்துள்ளனர். 12,382 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 4,417 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.