இந்தியாவில் 20 கோடியைத் தொட்டது கரோனா பரிசோதனை
இந்தியாவில் இதுவரை மொத்தம் 20 கோடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 20 கோடி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7,40,794 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனை எண்ணிக்கை 20 கோடியைத் (20,06,72,589) தொட்டுள்ளது.
Advertisement
நாட்டில் மொத்தம் 2,369 பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. இதில் அரசு ஆய்வகங்களின் எண்ணிக்கை 1,214, தனியார் ஆய்வகங்களின் எண்ணிக்கை 1,155.
கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதமும் 5.39 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. தற்போது 1.5 லட்சத்துக்கும் (1,48,590) குறைவானவர்களே கரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 8 மாதங்களில் இதுவே குறைந்தபட்ச எண்ணிக்கை. இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 1.37 சதவிகிதம்.
கடந்த 24 மணி நேரத்தில் 95 பேர் பலியாகியுள்ளனர்.
21 நாள்களிலேயே 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 50 லட்சம் தடுப்பூசி என்ற எண்ணிக்கையை வேகமாக எட்டிய நாடு இந்தியா.
கடந்த 24 மணி நேரத்தில் 10,502 அமர்வுகளில் 4,57,404 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3,01,537 பேர் சுகாதாரத் துறை பணியாளர்கள், 1,55,867 பேர் முன்களப் பணியாளர்கள்.
இதுவரை மொத்தம் 1,06,303 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குணமடைவோர் விகிதம் 97.19 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்."