முகப்பு
இந்தியா

மேற்குவங்கத் தேர்தல்: தொகுதிப்பங்கீடு குறித்து காங்கிரஸ் இடதுசாரிகளிடையே பிப்.7இல் பேச்சுவார்த்தை

நடைபெற உள்ள மேற்குவங்கத் தேர்தலுக்கான தொகுதிபங்கீடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே நாளை(பிப்.7) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
மேற்குவங்கத் தேர்தல்: தொகுதிப்பங்கீடு குறித்து காங்கிரஸ் இடதுசாரிகளிடையே பிப்.7இல் பேச்சுவார்த்தை
பகிர்:

நடைபெற உள்ள மேற்குவங்கத் தேர்தலுக்கான தொகுதிபங்கீடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே நாளை(பிப்.7) மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் தோ்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளதாக இடதுசாரி கட்சிகளும் காங்கிரஸும் அறிவித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடுகள் குறித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளிடையே 2 கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அதன்படி எதிர்வரும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகளிடையே 193 தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருதரப்பு கட்சித் தலைவர்களிடையே மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை (பிப்.7) மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

முன்னதாக இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில் 92 இடங்களில் இடதுசாரி கட்சிகளும், 101 இடங்களில் காங்கிரஸும் போட்டியிட முடிவுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →