முகப்பு
இந்தியா

உங்களுக்கு அக்‌ஷய்குமார் இருக்க சச்சின் எதற்கு? மத்திய அரசை விமர்சிக்கும் சிவசேனை

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் போன்றவர்களை சுட்டுரையில் கருத்து பதிவிட மத்திய அரசு நிர்பந்திக்கக் கூடாது என சிவசேனை விமர்சித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
உங்களுக்கு அக்‌ஷய்குமார் இருக்க சச்சின் எதற்கு? மத்திய அரசை விமர்சிக்கும் சிவசேனை
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் போன்றவர்களை சுட்டுரையில் கருத்து பதிவிட மத்திய அரசு நிர்பந்தித்திருக்கக் கூடாது என சிவசேனை விமர்சித்துள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 75 நாள்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு உலகின் முன்னணி பிரபலங்கள் ஆதரவு தெரிவித்திருந்ததற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாடகர் லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் சிவசேனை கட்சியின் மூத்தத் தலைவர் ராஜ்தாக்கரே, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பாரத ரத்னா விருது பெற்ற சச்சின், லதா மங்கேஷ்கர் உள்ளிட்டவர்களை சுட்டுரையில் கருத்து பதிவிட நிர்பந்தித்திருக்கக் கூடாது. இதன்மூலம் அவர்களின் மாண்பு சீர்குலைந்துள்ளது. இத்தகைய விவகாரங்களுக்கு நடிகர் அக்‌ஷய் குமார் போன்றவர்கள் இருக்கிறார்களே” எனத் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →