முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று புதிதாக 6,075 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று புதிதாக 6,075 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் இன்று புதிதாக 6,075 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 65,517 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் புதிதாக 6,075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,68,438ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 5948 பேர் குணமடைந்தனர். இதுவரை 8,96,668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 19 பலியானார்கள். 
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,867ஆக உயர்ந்துள்ளது. தற்போது 67,650 பேர் சிகிச்சையில் உள்ளனர். 445 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 2,24,659 பேர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments