முகப்பு
இந்தியா

வேளாண் சட்டங்கள்: நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது காங்கிரஸ்!

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி செவ்வாயன்று மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி
பகிர்:

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி செவ்வாயன்று மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார். 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல் தேசியத் தலைநகரான தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. 

நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதும், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பியதன் காரணமாக நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.