பிப்.யில் 2-வது முறையாக 10,000-க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு
பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக ஒருநாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல கரோனா பலி எண்ணிக்கையும் தொடர்ந்து 4-வது நாளாக 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
புது தில்லி: பிப்ரவரி மாதத்தில் இரண்டாவது முறையாக ஒருநாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதுபோல கரோனா பலி எண்ணிக்கையும் தொடர்ந்து 4-வது நாளாக 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 9,110 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,08,47,304 ஆக உயர்ந்துள்ளது.
அதுபோலவே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்து 78 பேர் பலியான நிலையில், ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1,55,158 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1,05,48,521 ஆக உள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 97.25% ஆகும். தற்போது கரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,43,625 ஆகக் குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பாதிப்பில் 1.32 சதவீதமாகும்.