அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் ரூ. 34,000 பண மோசடி
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மோசடி நடத்தியுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் மர்ம கும்பல் ஒன்று ஆன்லைன் மோசடி நடத்தியுள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகள் ஹர்ஷிதா, பழைய சோபா ஒன்றை ஆன்லைன் மூலமாக விற்பதற்கு பதிவிட்டுள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து தொடர்பு கொண்ட ஒருவர் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய க்யூ. ஆர். கோடை ஸ்கேன் செய்த ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20,000 மற்றும் ரூ. 14,000 என மொத்தம் ரூ. 34,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது.
இதையறிந்த ஹர்ஷிதா தில்லி சிவில் லைன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் இதுதொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.