தில்லி: செங்கோட்டையில் கொடியேற்றியவர் கைது
விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வன்முறைக்கு காரணமான தீப் சித்துவை தில்லி சிறப்புப்பிரிவு காவல்துறை கைது செய்தது.
இந்தியாதில்லி: செங்கோட்டையில் கொடியேற்றியவர் கைது
விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வன்முறைக்கு காரணமான தீப் சித்துவை தில்லி சிறப்புப்பிரிவு காவல்துறை கைது செய்தது.
விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி வன்முறைக்கு காரணமான தீப் சித்துவை தில்லி சிறப்புப்பிரிவு காவல்துறை கைது செய்தது.
தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது, தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டிருந்த இடத்தில் சமய கொடியையும், விவசாய சங்கக் கொடியினையும் ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டக்காரர்களை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். இதனால் காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்திற்கு முக்கிய காரணமானவரும், நடிகருமான தீப் சித்துவை தில்லி காவல்துறையினர் தேடிவந்த நிலையில், இன்று சண்டிகர் மற்றும் அம்பாலாக்கு இடையிலான ஸிராக்பூர் பகுதியில் தில்லி சிறப்பு காவல்துறையினர் சித்துவை கைது செய்தனர்.
அமெரிக்காவில் உள்ள நடிகையுடன் நட்பு வைத்திருந்த தீப் சித்து, அவரது உதவியுடன் முகநூலில் விடியோக்களை பதிவேற்றம் செய்து வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.